Saturday, 16 July 2011

பாண்டிய முரசு

சரித்திரம்
            மூவேந்தர்களில் இருவரான சேரர், சோழர் ஆகிய இருவரும், வேளிர் குல சிற்றரசர்கள்  ஐவரும் இணைந்து தலையாலங்கானம் என்னும் இடத்தில் பாண்டியனுடன் போர் புரிகின்றனர். இப்போரில் பாண்டியன் எளிதில் வென்று தலையாலங்கானத்துச்  செரு வென்ற பாண்டியன்  நெடுஞ்செழியன் என்னும் பெயரை பெறுகிறான். சோழன் இப்போரில் படு தோல்வி அடைந்திருந்தாலும்   பின்னாளில் அவன் ராய சூயம் என்னும் வேள்வி நடத்த பாண்டியன் உதவி செய்கிறான்.
 
பாண்டிய முரசு
             தன்னை எதிர்த்தச்  சோழனுக்கு ஏன் பாண்டியன் ராய சூயம் செய்ய உதவ வேண்டும்.
             பாண்டியனுடைய சிறு படை எவ்வாறு தன்னை விட  பல மடங்கு பலம் வாய்ந்த எதிரிப் படையை எளிதில் வென்றது.
              பாண்டியனுடைய வெற்றிக்கு வித்திட்டது யார்?
              மகாபாரதத்தில் அர்ஜுனனின்  மைந்தன் அபிமன்யுவை வீழ்த்த கௌரவர்கள் அமைத்த பத்ம வியூகத்தை* தாமும் அமைத்து பாண்டியர்களையும் எளிதில் வீழ்த்தி விடலாம் என்று இருந்தவர்களை பாண்டிய படைத்தளபதி மோகூர் பழையன்  எவ்வாறு எளிதில் வீழ்த்தினான்.    
             அதற்கு பழையன் உபயோகித்த உத்திகள் நமக்கு அக்காலத் தொழில்நுட்பத்திறனை கூறுகிறது.
             போர் கலையில் வல்லவனாயும், போர் வியூகங்களை அமைப்பதில் நிபுணனாய் இருந்த   இருங்கோவேள் என்ற  வேளிர் குல சிற்றரசன் ஏன் இவ்விடத்தை தேர்ந்தெடுத்தான்.   
              மதுரை மாநகரில் முற்றிகை இட்ட சேரர், சோழர் படைகள் பாண்டியனிடம்    தோற்று  பின் வாங்கிய பின் உரையூருக்கோ, தஞ்சைக்கோ செல்லாமல்  ஏன்  தலையாலங்கானம் வந்து பாசறை அமைத்தனர்.  
              அப்படைகளுக்கு  ஐந்து வேளிர் குல சிற்றரசர்கள்**  ஏன் உதவ முன் வர வேண்டும் .
              கடற்கொள்ளையனான  டைரியஸ் ஏன் படைத்தளபதி பழையனுக்கு உதவ வேண்டும்.
               பாண்டியர்களின் மிகப் பெரிய பலமாக கருதப் பட்ட பழையனை பாண்டியனிடமிருந்து அகற்ற,சேரன் பல சதித் திட்டங்களை எல்லாம் செய்தும், அவற்றிலிருந்து எவ்வாறு பழையன் தன்னையும் தனது காதலி மேகலையையும்  இரு முறை விடுவிக்க செய்கிறான்.  
              இப்படிப்பட்ட   வினாக்களுக்கு விடை கூறும் விதமாக கதையாசிரியர் உதயணன் அவர்கள்   பல்வேறு சுவாரசியமான  திருப்பங்களுடன் பதிலளித்திருக்கிறார் பாண்டிய முரசாக!சரித்திர குறிப்புகள்

**   ஐந்து வேளிர் குல சிற்றரசர்கள்முறையே   
       எருமையூரன் - புரவிபடை
      திதியன் - தேர்படை
      பொருநன் - விற்படை
      எழினி -யானைப்படை
      இருங்கோவேள் - போர்வியுகம்

          
           நடுஞ்செழியனின் பாட்டனார் ஆரிய படை கடந்த பாண்டியனால் அமைக்கப்பட்ட ஐந்து முகங்களை கொண்ட மிக பெரிய முரசை நிர்வகித்தான் அதுவே பாண்டிய முரசு.


            சகட வியூகம் என்பது வண்டியைப் போன்ற உருவ அமைப்பைக் கொண்டது.
          கிரௌஞ்ச வியூகம் என்பது வனத்தில் கிரௌஞ்சாப் பறவைகள் எப்படிச் சரி சாரையாய்  செல்லுமோ அப்படிச் செல்லுமாறு நுண்ணிய கழுத்தையும் இடைக்கு ஏற்ற இறகினையும்  கொண்டதாக அமைக்கபடுவது.
          சருவதோபத்திர வியூகம் என்பது ஒவ்வொரு புறமும் எட்டு வளைவுகளைக் கொண்டதாக அணி வகுக்கப்படுகிறது.
          கோள வியூகம் என்பது எட்டு வட்டங்களாகவும் எல்லாப் புறங்களிலும் வாயில்களைக் கொண்டதாகவும் இருக்கக் கூடியது.
          வியாள வியூகம் - பாம்பு வியூகம்   
          கருட வியூகம்
          மகர வியூகம்
          ஊசி வியுகம்

    
      *  பத்ம வியூகம் (சக்கர வியூகம்) - வீரர்க் கோட்டை இந்த வியூகம் மற்ற வியூகங்களைப்  போல் நகராது. ஒரே ஒரு வாயில் தான்.
எட்டு வளையங்களைக் கொண்ட அந்த வியுகத்தில் வெளி வியுக வலயங்கள் முன்றையும் காலட்படைகளாலும் விற்படைகளாலும் அமைத்து கிழக்கு வளையங்களுக்கு பொருனனையும் மேற்கு  வளையங்களுக்கு எருமையூரானும்   தலைமை வகுத்தனர். அவற்றையடுத்த 4  வளையங்களில் புரவிப்படை அணி வகுத்தது.அவற்றுக்குச் சேரனும் சோழனுமாய் தலைமை வகித்தார்கள். வியூகத்தின் நடுவிலும் முகப்பிலும் தேர் படைகள் நிறுத்தி தலைமை தாங்கினான் திதியன்.   எழினியின் திறமை மிகுந்த யானைப்படை வியூகத்தில் சேராமல் வியூகதிகுப் பின்னன் யானைக் கோட்டை  ஒன்றை அமைத்தான்.இருங்கோவேள் வளையத்தின் வடக்கு புற பகுதிக்கு தலைமை தாங்கினான்.

இது என் முதல் முயற்சியாதலால் உங்கள் கருத்துகளை அறிய ஆவலுடனும், பிழைகளை நீக்கவும் உதவ உங்கள் ஆதரவுகளை கேட்டு கொள்கிறேன்.


1 comment:

  1. நன்றி. ஒவ்வொரு பதிவையும் எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை சொன்னால் என் போன்ற புதியவர்களுக்கு உதவியாக இருக்கும். கடல் புறா மற்ற பாகங்களையும் தருமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

    ReplyDelete